மிக அதி தீவிர புயலாக உருவெடுக்கும் ஆம்பன் புயல்..! எந்த நகரத்தை தாக்க உள்ளது தெரியுமா?

வங்காள விரிகுடாவில் உருவாகியிருக்கும் ஆம்பன் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிகத் தீவிரமான புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மிகவும் கடுமையான ஆம்பன் சூறாவளி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் "மிகவும் கடுமையானதாக" மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம் , அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய பல கடலோர மாவட்டங்களில் இந்த புயலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும். எனவே அந்த இடங்களில் அதிக மழை மற்றும் அதிக வேகம் கொண்ட காற்றை ஏற்படுத்தும். "வங்காள விரிகுடாவின் மையப் பகுதிகள் மற்றும் அக்கம் பக்கங்களில் கடுமையான சூறாவளி புயலான ஆம்பன் கடந்த 06 மணி நேரத்தில் 05 கிமீ வேகத்தில் மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்தது. இது மேலும் கடுமையான சூறாவளி புயலாக தற்போது தீவிரமடைந்து காணப்படுகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் இது மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி மெதுவாக நகர்ந்து பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி மீண்டும் வளைந்து வடமேற்கு வங்காள விரிகுடா வழியாக வேகமாக நகர்ந்து கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேற்கு வங்கம் - 2020 மே 20 மதியம் மாலை வேளையில் மிக சக்திவாய்ந்த சூறாவளி புயலாக திகா (மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள் (பங்களாதேஷ்) இடையே மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மிதமான மழையை எதிர் பார்க்கலாம் எனவும் கூறியுள்ளது. மழை பொழிவை பொறுத்தவரையில் வரும் மே 18 ஆம் தேதி மாலை நேரம் முதல் கடலூர் ஒடிசா இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் வரும் மே 19 ஆம் தேதி அன்று, ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை எதிர்பார்க்கலாம். அடுத்து வரும் மே 20ஆம் தேதி அன்று வடக்கு கடலோர ஒடிசாவில் அதிக மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. அதிவேக காற்றுடன் உருவாகியிருக்கும் இந்த கோயில் மேற்கு வங்கத்திலும் ஒடிசாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு வாரியம் தங்களுடைய 10 குழுக்களை ஒடிசாவிற்கும் 7 மீட்புக் குழுக்களை மேற்குவங்கம் மாநிலத்திற்கும் அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.