கொரோனாவுக்கு இது தான் மருந்து..! முதல் முறையாக பெயரை வெளியிட்ட டிரம்ப்!

கொரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 11,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 2,77,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த நோய்க்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து தீவிரம் காட்டி வந்தார். 18-ஆம் தேதியன்று அவர் வெளியிட்டிருந்த பேட்டியில், "அமெரிக்க மக்களின் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பிற்கு நான் பாதுகாப்பு அரணாக இருப்பேன். அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையிடமிருந்து கிடைத்த முக்கியமான தகவலை விரைவில் பகிர்வேன் " என்று கூறியிருந்தார்.

அதன்படி இந்த கொடிய நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய மருந்து கலவையை அவர் அறிவித்துள்ளார். அதாவது, "ஹைட்ராக்ஸிக்ளோரோகுயினைன் மற்றும் அசித்ரோமைசின்" (HYDROXYCHLOROQUNINE AND AZITHROMYCIN) மருந்து கலவை மருத்துவத்துறையின் மாற்றத்தை கொண்டுவர உண்மையான வாய்ப்பை ஏற்படுத்தும். இதற்கான கண்டுபிடிப்பதற்காக அமெரிக்க மருத்து கட்டுப்பாடுத்துறையை நான் பாராட்டுகிறேன். 

விரைவில் இந்த மருந்து கலவையை பயன்படுத்துங்கள். மக்கள் விரைவாக செத்து கொண்டிருக்கிறார்கள். மருந்தை பயன்படுத்தி காப்பாற்றுங்கள். கடவுள் நம்மை ஆசீர்வதிக்கட்டும்" என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியானது உலக மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.