கொரோனாவை முன்கூட்டியே கணித்த ஜோதிடச் சிறுவன் அபிக்யா ஆனந்த் பற்றிய திகைப்பூட்டும் உண்மைகள்..! என்ன தெரியுமா?

கொரனாவால் உலகமே ஸ்தம்பிக்கும் என ஒரு வருடத்திற்கு முன்னேரே கணித்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த்தின் பின்னணி என்ன அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பார்ப்போம்.


நவம்பரில் இருந்து 6 மாதத்திற்கு உலகம் ஒரு கொடிய நோயால் சிக்கித் தவிக்கும் என்று அபிக்யா ஆனந்த் என்ற சிறுவன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அபிக்யா ஆனந்த் கணித்து கூறிய விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அபிக்யாவின் தந்தை ஆனந்த பாலசுப்பிரமணியம். அபிக்யா பகவத் கீதையை படித்து தெரிந்து கொண்டார். இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு செல்கிறார். அதே சமயம் ஆயுவேர்வேதிக் மைக்ரோபயோலாஜிக்கில் பிஜி டிப்ளமோ படித்திருக்கிறார்.

இதற்காக கர்நாடக அரசு 2015ம் ஆண்டு விருது வழங்கி கவுரவித்துள்ளது. 3 வயது இருக்கும்போதே 50 நாடுகள் பெயரும், அதன் கொடியும் சொல்லத் தெரியும் என்கிறார்கள். அபிக்யாவுக்கு தமிழ், இந்தி, சமஸ்கிருதம், கன்னடம் என பல மொழிகளை கற்றுக்கொண்டுள்ளார். வாஸ்து சாஸ்திரமும் தெரிந்து வைத்துள்ளார். அவருடைய முதல் கணிப்பு 2018ம் குளோபல் ரெஸ்ட்டிஷன் வரும் என்று கணித்திருந்தார். அஸ்ட்ராலிஜக்கல், கான்ஸ்டியுஷன், அறிவியல், பொருளாதாரம் அனைத்தையும் வைத்து சொல்லி இருந்திருக்கிறார்.

பகவத் கீதையில் யாருக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தீர்த்து வைப்பார். இவருடைய தங்கைக்கு ஒருமுறை டெங்கு காய்ச்சல் வந்தபோது ஆயுர்வேதிக் முறைகளை பின்பற்றி அதாவது லவங்கம், தேன், மிளகுகளை வைத்து சரி செய்திருக்கிறார். இவர் அஸ்ட்ராலஜியில் பட்டமும் பெற்று 400 பேருக்கு அஸ்ட்ராலஜி கற்றுக் கொடுக்கிறார். கொரனா வைரஸ் குறித்து 2018 பிப்ரவரி மாதமே கணித்த இவர், ஆகஸ்ட் மாதம் இதுகுறித்து விவரங்களை யூடியுப்பில் வெளியிட்டார்.

ஆனால் அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைத்துக்கொள்ளவேண்டும் வயதானவர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.