மீண்டும் அந்த நடிகருடன் ஜோடி! அமலா பால் எடுத்த முடிவு! கிசுகிசுக்கும் திரையுலகம்!

ராட்சசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர் .


சமீபத்தில் நடிகை அமலாபால் நடித்த ஆடை திரைப்படத்தில் இவர் துணிச்சலாக நடித்ததைக் கண்டு பல்வேறு தரப்பினரும் நடிகை அமலாபாலை பாராட்டி வந்தனர் .

இந்நிலையில் நடிகை அமலாபால் தனது தனது அடுத்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்க உள்ளார் . மான்ஸ்டர்  திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்க உள்ளார் . 

தெலுங்கில் மிகப் பெரிய ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக் ஆக இந்த படம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . தெலுங்கில் நானி மற்றும் ஷ்ரதா ஸ்ரீநாத்  ஜெர்சி படத்தில் ஜோடியாக  நடித்திருந்தார்கள் . தமிழ் உருவாக இருக்கும் இந்த படத்தில் நானி  வேடத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் , ஷ்ரதா ஸ்ரீநாத் வேடத்தில் நடிகை அமலாபாலும் நடிக்க உள்ளனர் . கிரிக்கெட் வீரரைப் பற்றிய கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்தப்படம் விளங்குகிறது .

ராட்சசன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைய உள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது .

மேலும் ராட்சசன் திரைப்படத்தின் போதே இவர்கள் இருவரும் காதலிப்பதாக பல்வேறு தகவல்கள் வந்தன . ஆனால் இவர்கள் இருவருமே அதனை முற்றிலுமாக மறுத்தனர் . இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதால் திரையுலகில்  கிசுகிசுக்கள் பரவி வருகின்றன .