பிறந்த மேனியாக நடித்தது ஏன்? - அமலா பால் ஷாக் தகவல்!

கோலிவுட் திரையுலகில் வலம் வந்த நடிகைகளுள் ஒருவரான அமலாபால் "ஆடை" என்ற படத்தின் டீசரில் ஆடையில்லாமல் நடித்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட்டில் சில காலங்களுக்கு முன்பு கொடிகட்டிப் பறந்தவர் நடிகை அமலா பால். இவர் மைனா, நிமிர்ந்து நில் ஆகிய படங்கள் நடித்து பிரபலம் அடைந்தார். கோலிவுட் இயக்குநரான விஜய் என்பவரை திருமணம் முடிந்து சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் இவர் தற்போது "ஆடை" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் டீசரானது நேற்று வெளிவந்துள்ளது. டீசர் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது கவர்ச்சியாகவும், சில இடங்களில் ஆடையின்றியும் நடித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. குறிப்பிட்ட ஒரு காட்சியில், "டேப்பை சுற்றி தன் உடல் முழுவதையும் மறைத்துள்ளது போன்று அமைந்துள்ளது". மற்றொரு காட்சியில், "உடல் முழுவதிலும் காயங்கள் ஏற்பட்டன போன்று தோற்றமளிக்கிறார்".

மேலும் டீசரில் இருந்து, படத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் அவர் குடித்துவிட்டு காணாமல் போவது போன்று அமைந்துள்ளது. இந்த படமானது அமலாபாலின் திரைவாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் சினிமா வல்லுநர்கள் கணிக்கின்றனர். ரசிகர்கள் டீசரை பார்த்த ஆரவாரத்தில் படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் காட்சிக்கு அவசியம் என்பதால் ஆடைகள் இன்றி நடித்ததாக அமலா பால் கூறியுள்ளார்.