பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதாமலே எல்லோரையும் பாஸ் செய்யவைத்த எடப்பாடி பழனிசாமி, இப்போது அரியர் பரீட்சைக்கு அப்ளை செய்த எல்லோரையும் பாஸ் செய்ய வைத்திருப்பதால் மாணவர்களின் இதயக்கனியாக மாறியிருக்கிறார்.
அரியர் பரீட்சைக்கு அப்ளை செய்த அனைவரும் பாஸ்! எடப்பாடி பழனிசாமி மாணவர்களின் இதயக்கனியாக மாறிவிட்டார்!

கொரோனாவால் உலகமே திண்டாடி வரும் நிலையில் மாணவர்களுக்கு மட்டும் ஒரே கொண்டாட்டம்தான். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது. மாணவர்கள் தேர்வு எழுத வரமுடியாத சூழல் நிலவியது இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனைக் கேட்டதும் வயிற்றில் பாலை வார்த்த எங்கள் தெய்வமே என முதலமைச்சர் பழனிசாமிக்கு மாணவர்கள் தீபாராதனை காண்பித்து நன்றி செலுத்தினர். இப்போது, தேர்வு எழுத பதிவு செய்திருந்த அரியர் வைத்த மாணவர்கள் அனைவருமே ஆல் பாஸ் என நேற்று மீண்டும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.
இதையடுத்து மீம்ஸ்கள் மூலம் எடப்பாடியை மாணவர்கள் பாராட்டித் தள்ளிவிட்டனர். ’அரியர் மாணவர்களின் அரசனே நீ வாழ்க’ என ஒருசில இடங்களில் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. எப்படியோ மாணவர்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.