கெஜ்ரிவால் ஜி..! உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப..! பெண் எம்எல்ஏ எடுத்த அதிரடி தடாலடி முடிவு!

டெல்லி: ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறிய அல்கா லம்பா, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


டெல்லி சாந்தினி சவுக் தொகுதி எம்எல்ஏவாக உள்ள அல்கா லம்பா, 2015ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில்  உறுப்பினராக சேர்ந்தார். இந்நிலையில், அக்கட்சியில் இருந்து விலகுவதாக, தற்போது அவரது ட்விட்டர்  பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து,  மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்பாக, அவர் வெளியிட்டிருந்த பதிவில், அர்விந்த் கெஜ்ரிவாலை குறிப்பிட்டு, ''உங்களது விருப்பப்படி என்னை கட்டாயப்படுத்தி ஆம் ஆத்மி கட்சியினர், வெளியேற்றிவிட்டனர்,'' என்று அல்கா லம்பா குறிப்பிட்டிருந்தார்.

இதுதவிர அர்விந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து  அவர் விரிவான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.