தமிழில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் நான்காவது இடத்தை விஸ்வாசம் திரைப்படம் பிடித்து இருக்கிறது.
வசூல் சாதனை! விஜயின் சர்காரை அடித்து தூக்கிய அஜித்தின் விஸ்வாசம்!

தல அஜித் குமார் -
இயக்குனர் சிறுத்தை சிவா இணைந்த நான்காவது திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில்
அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி
பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட
படத்துடன் விசுவாசம் பொங்கல் திருநாள் விருந்தாக வெளியானது. இந்த படத்தில்
அஜித்தின் மாஸ் மட்டுமல்லாமல் குடும்ப செண்டிமெண்டும் கலந்திருந்ததால், குடும்பம்
குடும்பமாக இப்படத்தைப் பார்க்க திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது.
பெண் பிள்ளை பெற்றோர் அழுதுகொண்டே
திரையரங்குகளை விட்டு வெளியே வருவதை காணமுடிந்தது. நாளுக்கு நாள் கூட்டம்
அதிகரித்துக் கொண்டே போனதால் முந்தைய அஜித் படங்கள் படைத்த சாதனைகள்
அனைத்தையும் விஸ்வாசம் முறியடித்து.
பேட்ட படமும் ஒருபுறம்
வசூலை குவிக்க விஸ்வாசமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. தமிழகத்தில்
மட்டும் 125 கோடி ரூபாய் வசூலை விஸ்வாசம் கடந்துவிட்ட நிலையில் தற்போது தமிழ்
திரையுலக வசூல் சாதனையில் அஜித்தின் திரைப்படம் வரலாறு படைத்துள்ளது.
தமிழில் அதிக வசூலை ஈட்டிய பாகுபலி 2,
ரஜினியின் 2.0 , இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் ஆகிய படங்களுக்கு அடுத்த இடத்தை
விஸ்வாசம் பிடித்துள்ளது.
இதற்குமுன் நான்காவது இடத்தில் இருந்த
இளையதளபதி விஜய்யின் சர்கார் படத்தை விஸ்வாசம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
சென்னையில் மட்டும் விஸ்வாசம் திரைப்படம் தொடந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக
ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்போது வரை சென்னையில் இந்த திரைப்படமானது 12
கோடியே 3 லட்சம் ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் விசுவாசம்
திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் விரைவில் மெர்சலின் வசூலையும்
முறியடித்து அந்த இடத்தில் விசுவாசம் அமரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.