நடிகர் அஜித் ஏழை நண்பரின் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுத்து உதவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தக் குழந்தைக்கு ஹார்ட் ஆப்பரேஷன் பண்ணிடுங்க..! மொத்த பில்லையும் எனக்கு அனுப்பிடுங்க...! நெகிழ வைத்த தல..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் ஆவார். திரைப்பட பின்னணி எதுவும் இல்லாமல் தன்னுடைய கடினமான உழைப்பு மற்றும் திறமையான நடிப்பின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் ஒரு காலகட்டத்தில் தொடர் தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்து தற்போது அவர் திரையுலகில் டாப் ஹீரோக்களின் பட்டியலில் உள்ளார். மேலும் அன்று முதல் இன்று வரை நடிகர் அஜித் மிகவும் எளிமையாகவும் நேர்மையாகவும் இருந்து வருவதால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் நடிகர் அஜித்தை மிகவும் பிடிக்கும்.
நடிகர் அஜித் யாருக்கும் தெரியாத வகையில் ஏராளமான உதவிகளை செய்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடிகர் அஜித்தின் ஏழை நண்பரின் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தி உள்ளார்கள். இதைக் கேள்விப்பட்ட நடிகர் அஜித் அந்த டாக்டரிடம் போன் செய்து பேசி அந்த இதய அறுவை சிகிச்சைக்கான பணத்தை நான் கொடுக்கின்றேன். அந்த குழந்தைக்கு பத்திரமாக ஆபரேஷன் செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆப்ரேஷன் நடக்கவிருந்த நள்ளிரவில் தனது மேனேஜருக்கு போன் செய்து ஆபரேஷன் எத்தனை மணிக்கு நடக்கிறது என்று கேட்டுள்ளார். ஏனென்றால் அந்த நேரத்தில் அவர் எழுந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அஜித் கூறியிருந்தாராம். ஆப்ரேஷன் அதிகாலை 4 மணிக்கு என்று அறிந்த நடிகர் அஜித் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து பிரார்த்தனை செய்து இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.