கூட்டம் அதிகமாக இருந்த பேருந்துக்குள் அஜித் பட நடிகைக்கு நிகழ்ந்த கொடுமை..! அன்று முதல்..?

பேருந்துகளில் பல பெண்களுக்கு அன்றாடம் நடக்கும் கொடுமை தனக்கும் நிகழ்ந்துள்ளதாக நடிகை ஷ்ரத்தா பதிவிட்டுள்ளார். தெரிவித்துள்ளார்.


தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், விக்ரம் வேதா என்கிற தமிழ் சினிமா மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சமீபத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். இவர் கொரனாவால் பாதிக்கப்பட்டிருந்நதாக செய்தி வெளியான நிலையில் அதை மறுத்திருந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத், 2015ல் மலையாள திரைப்படம் கோஹினூர் மூலம் காலடி எடுத்து வைத்தார். 2016ல் கன்னட மொழியில் வெளியான யு டர்ன் திரைப்படம் ஷ்ரத்தாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 

நிர்பயா சம்பந்தப்ட்ட வெப் சீரிஸ் ஒன்றை சமீபத்தில் பார்த்த நடிகை ஷ்ரத்தா கூட்டமான பேருந்துகளில் பயணிக்கும்போது தனக்கும் கொடுமைகள் நடந்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூட்டமான பேருந்துகளில் நாள்தோறும் லட்சக் கணக்கான பெண்கள் கொடுமைகள் அனுபவிப்பதாக கூறுகிறார். கூட்டம் குறைவு என்பதற்காக தனியார் பேருந்தில் பயணித்தாலும் யாரேனும் சில்மிஷம் செய்வார்களோ என்ற அச்சம் இருந்துக் கொண்டே இருக்கும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

என்ன தான் நாடு முன்னேறினாலும், அரசு பேருந்தில், பள்ளி, கல்லூரி மற்றும் பணியிடங்களுக்கு செல்லும் பெண்கள் இது போன்ற சில்மிஷ துயரங்களை அனுபவித்துக் கொண்டே தான் இருக்கின்றனர் என கூறுகிறார் ஷ்ரத்தா. தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகி வரும் மாறா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஷ்ரத்தா.