அஜித்தின் ஆசை தங்கையா இவர்? வைரலாகும் தல குடும்ப புகைப்படத்தில் இருப்பது யார்?

நடிகர் அஜித் அவர்களின் அரிய குடும்பப்புகைப்படம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் ஆவார். திரைப்பட பின்னணி எதுவும் இல்லாமல் தன்னுடைய கடினமான உழைப்பு மற்றும் திறமையான நடிப்பின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அஜித். தனது ரசிகர் மன்றத்தை அஜீத் கலைத்த பிறகும் கூட நடிகர் அஜீத் மீது அவரது ரசிகர்கள் வைத்த அன்பு குறையவே இல்லை என்றே கூறலாம். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம் மற்றும் நேற்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆகின.

நடிகர் அஜீத் சமீபத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.25 கோடி ரூபாய் நிதி உதவியை அளித்திருந்தார். வருகிற மே 1ம் தேதி தனது பிறந்தநாளை எதிர்நோக்கி வரும் நடிகர் அஜித் , கொரோனா ஊரடங்கு நிலவி வரும் இந்த காலகட்டத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் யாரும் ஈடுபட கூடாது என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்துள்ளார். இவ்வாறு நடிகர் அஜித் திரைப்படங்களில் மட்டும் ஹுரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஜென்டில்மேனாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவர் சம்பந்தப்பட்ட அரிய புகைப்படங்களை தேடி அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் இருப்பது போன்ற பழைய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் இருக்கும் அந்த பழைய புகைப்படத்தில் அஜித் அருகே நின்று கொண்டிருப்பவர் அவரது ஆசை தங்கையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.