சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படமும், தல அஜித்தின் வலிமை திரைப்படமும் மீண்டும் ஒரே நாளில் திரைக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜித்துக்கு ரஜினி மூலமாக பக்கா ஸ்கெட்ச்..! சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் இது தானா?

கடந்த ஆண்டு பொங்கலுக்கு கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படம் வெளியாகியது. அதேபோல சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் பொங்கல் அன்றே திரைக்கு வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் கடந்த வருடம் ரிலீஸ் ஆகியதால் அவர்களின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இரண்டு திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை செய்தன.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அண்ணாத்த திரைப்படமும், இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்குவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் ஏற்கனவே 40% முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா பிரச்சனைகளால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.
இதனால் அடுத்த பொங்கலுக்கு வெளியாக உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்துடன் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படமும் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வினோத்தின் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை மிகப் பெரிய ஹிட்டானதால் இவர்கள் மீண்டும் ஜோடி சேரும் வலிமை திரைப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதைப்போல முதல் முறையாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதால் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். கடந்த வருடம் பொங்கலை போலவே அடுத்த வருடம் பொங்கலுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்தின் திரைப்படம் வெளியானால் ரசிகர்களுக்கு அது விருந்தாக அமையும் என்றால் அது மிகையாகாது. ஆனால் போன முறை விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா இந்த முறை ரஜினியை வைத்து அஜித்திற்கு எதிரான படத்தை இயக்கியுள்ளார்.