ஆகஸ்ட் இறுதியில் அஜித்தின் அடுத்த படத்திற்கு பூஜை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் 60ஆவது திரைப்படம் ஆகஸ்டு மாத இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார் .


நடிகர் அஜித் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் மாதம்  8ம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் .

அதுமட்டுமில்லாமல் அஜித் நடிக்கும் அடுத்த படமான AK60 திரைப்படம் ஆகஸ்ட் மாத இறுதியில் பூஜை போட்டு தொடங்கப்பட உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார் .

அஜித்தின் இந்த திரைப்படத்தையும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் அவர்களே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார். 

முன்னர் நிக் ஆர்ட்ஸ் எனும் தனது நண்பரின் நிறுவனத்திற்கு மட்டுமே அஜித் நடித்து கொடுத்து வந்தார். அதன் பிறகு தனது அடுத்தடுத்த படங்களை தயாரிக்க போனி கபூருக்கு மட்டுமே அஜித் வாய்ப்பு கொடுத்துள்ளார்.