எடப்பாடி கோட்டுக்கும் சூட்டுக்கும் வேலை வந்தாச்சு! அடுத்த டூர் ரெடி! இஸ்ரேலுக்கு பறக்க ஏற்பாடு தீவிரம்!

உலக டூர் முடித்து தமிழகம் திரும்பிவந்த எடப்பாடி, நாட்டு மக்களுக்கு நல்ல நல்ல திட்டங்கள் அறிவிப்பார் என்று பார்த்தால், ‘நான் அடுத்த டூர் செல்ல தயாராக இருக்கிறேன்’ என்று அடுத்த டூர் பற்றி அறிவித்து இருக்கிறார்.


இன்று காலை முதல்வர் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அவரை தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம் கோட், சூட் உடை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. 

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, 'தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லும்போது அவர்கள் உடையில் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்றும், வெளிநாட்டு தொழிலதிபர்களை சந்திக்கும்போது அவர்கள் உடையில் இருந்தால்தானே ஒரு மரியாதை இருக்கும். நாம் தொழில் தொடங்க போகவில்லை, தொழில் முதலீடுகளை ஈர்க்கவே சென்றுள்ளோம்' என்று சிறப்பாக விளக்கம் அளித்தார். 

தமிழக முதல்வர் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு செல்லுகிறார். அங்கு இருந்து கோட்டைக்கல்லில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அதன்பிறகு இஸ்ரேல் நாட்டுக்கு நீர் சிக்கனம் பற்றி அறிந்துகொள்ள சுற்று பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது வேலுமணி, தங்கமணியை கூட்டிச் செல்ல இருக்கிறாராம்.

பின்னே, அவங்களுக்கு மட்டும் பசிக்காதா..?