இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கு கருமாதி இல்லைங்க கருமாறி! ஆன்மிகத்தில் அதன் அர்த்தம் இதுதான்!

பொதுவாக யாராவது இறந்துவிட்டால் இறந்தவரின் உடலை எடுத்துச் சென்று எரித்து விடுகின்றோம்... அல்லது புதைத்து விடுகின்றோம்...


அந்த உடலானது மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகின்றது... அதன் பிறகு மூன்றாவது நாள் இறந்தவரின் புகைப்படம் ( photo ) வைத்து சாமி கும்பிடுகின்றோம்...*அதாவது நல்லதற்கு வா... தீயதற்கு வராதே...* என்று சாமி கும்பிடுகின்றோம்...எதனை நாம் வா என்றும், வராதே என்றும் அழைக்கின்றோம்... 

அந்த எலும்பு சதையாலான உடலை இயக்கிக் கொண்டிருந்த உயிர் சக்தியாகிய ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து, மூன்று நாட்களுக்கு அந்த வீட்டினை சுற்றிக்கொண்டே இருக்கும்...அந்த ஆத்மாவை தான் நல்லதற்கு வா... தீயவற்றிக்கு வராதே என்று நாம் சாமி கும்பிடுகின்றோம்... 

அதன் பிறகு 13 லிருந்து 16-வது நாளில் கருமாதி என்ற ஒரு சடங்கினை நாம் செய்கின்றோம்...அதனுடைய அர்த்தம் என்னவென்றால் ஒரு மனிதன் பிறந்து, அந்த மனிதனுடைய ஆயுள் காலம் முழுமையடைந்து, உடலை விட்டு ஆத்மா இயற்கை எய்தினால்...மீண்டும் 13 லிருந்து 16-வது நாளில் *இன்னொரு தாயினுடைய கர்ப்பத்தின் கருவில், நான்கிலிருந்து ஐந்து மாத பிண்டத்தில் சென்று, அந்த ஆத்மாவானது பிரவேசித்து கர்ப்பத்திற்கு மாறிச் செல்கிறது...*  

எனவே ஒரு தாயின் உடைய கருவில் பிறந்து வாழ்ந்து உடலை விட்டு நீங்கி, மற்றொரு தாயினுடைய கருவிற்கு மாறிச் செல்வதைத் தான், *கருமாறி* என ஒரு சடங்காக நாம் கொண்டாடி வருகின்றோம்... 

*மனித ஆத்மாவானது மீண்டும் மீண்டும் பிறவி சக்கரத்தில் வந்துகொண்டே தான் இருக்கும்...* மனித ஆத்மா மீண்டும் மீண்டும் மனிதனாகத்தான் பிறக்குமே தவிர, வெவ்வேறு ஜீவராசிகள் ஆக பிறவி எடுக்காது...ஆத்மாவை *ஊனக் கண்களால் பார்க்க இயலாது...* ஆகவே *ஆத்மாவிற்கு அழிவு என்பதும் கிடையாது...*