விவாகரத்து ஆன நடிகையுடன் மீண்டும் மீண்டும் இணைந்து விஜய்சேதுபதி!

நடிகை அதிதி ராவ் ஹய்தாரி நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து "துக்ளக் தர்பார் " என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.


சத்யதீப் மிஸ்ரா எனும் நடிகரை கடந்த 2009ம் ஆண்டு அதிதி ராவ் திருமணம் செய்திருந்தார். இவர்கள் திருமணம் 2013ம் ஆண்டோடு முடிவுக்கு வந்தது.

தற்போது இவர் இந்தி தமிழ் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அதிதி ராவ் விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் .

நடிகை அதிதி மற்றும் விஜய் சேதுபதி் இருவரும் இதற்கு முன் பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

துக்ளக் தர்பார்  திரைப்படத்தை அறிமுக இயக்குனரான டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்க உள்ளார் . 

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை அதிதி ராவ் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பதை இந்த திரைப்படக்குழுவினர் தங்களுடைய  டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவலாக  வெளியிட்டு உள்ளனர் .

இந்த திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர் இந்த படத்திற்கான இசையை கோவிந்த் வசந்தா என்பவர் அமைக்க உள்ளார் . இந்த திரைப்படம் சன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிக்க படுகிறது .