நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக நடிகை ஒருவர் கூறிய பொய்யால், அவரது சினிமா எதிர்காலமே பறிபோனதாக தெரிவித்துள்ளார். அந்த நடிகையின் பெயர் பூ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ்..! தீயாய் பரவிய தகவல்..! காரணம் அந்த "பூ" நடிகையாம்..! கோடம்பாக்கம் கிசுகிசு!
நடிகர் மோகனை என்றுமே யாரும் மறக்க மாட்டார்கள். மைக் மோகன் என்றாலே, 1980களில் தமிழ் திரையுலகில் வலம் வந்தவர்தான் என்பதை என்னாளும் ரசிகர்கள் அறிவர். அவருக்கு சுரேந்தர் என்பவர்தான் டப்பிங் கொடுத்தார், பின்னணியில் பலர் பாடி உள்ளனர். அவர் நடித்த உதயகீதம், இதயக்கோயில், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட படங்கள் என்றும் மனதை விட்டு நீங்காது.
ஆனால் சினிமாவில் ஒரிஜினலாகே அவர்தான் பேசுவது போல, பாடுவது போல இருக்கும். தன்னுடய பாடல்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் மோகன் என்றால் அது மிகையாகாது. மோகன் படம் என்றாலே 100 நாட்கள் நிச்சயம் ஓடும் என்றே பேசும்படி இருந்தது. வித்தியாசமான கதைக்களம், பாடல்கள் சூப்பர் டூப்பர்ஹிட், தயாரிப்பாளர்களின் வசூல் நாயகனாய் வலம்வந்தார் மோகன்.
இப்படி எல்லா விதத்திலும் சிறந்த விளங்கிய மோகன் மீது ஒரு நடிகை காதல் வயப்பட்டுள்ளார். ஆனால் அதை மோகன் மறுத்துவிட்டதால், அந்த கோபத்தில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக ஒரு பீதியை கிளப்பிவிட்டார். இந்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவர அனைவரும் நம்பிவிட்டனர். எனவே மோகனுடன் நடிக்க நடிகைகள் பலரும் தயங்கினார்கள், தயாரிப்பாளர்களும் ஓட்டம்பிடிக்க மோகனது திரை வாழ்விற்கு பெரிதும் பின்னடைவு ஏற்பட்டது.
இதனால் விரக்தியின் எல்லைக்கு சென்ற மோகன், தன்னுடையவீட்டை விற்று விட்டு சென்றுவிட்டாராம். இதனை அவரே பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார், மேலும்அந்த நடிகையின் பெயர் ”பூ”வில் தொடங்குமாம்.