குடி..! கும்மாளம்..! கூத்து..! கார் விபத்து..! நுங்கம்பாக்கத்தில் நடந்தது என்ன? யாஷிகா வெளியிட்ட ஷாக் தகவல்!

சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இன்றைய தினம் யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக கூறி தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் இந்த கார் விபத்து குறித்து உண்மை நிலவரத்தை பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் , இன்று காலை நுங்கம்பாக்கத்தில் ஏற்பட்ட விபத்து என்னுடைய காரில் நடந்தது கிடையாது என்னுடைய நண்பர் ஒருவரின் கார் தான் விபத்துக்குள்ளானது. விபத்து நடைபெற்ற உடனே என் நண்பருக்கு என்ன ஆனது என்று பார்ப்பதற்காகவே என் காரை விட்டு நான் இறங்கினேன். உடனே அனைவரும் என்னுடைய கார் தான விபத்துக்குள்ளானது எனவும் , அது மட்டுமில்லாமல் நான் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டேன் என பல தகவல்கள் பரப்பி வருகின்றனர். என்னுடைய கார் விபத்துக்குள்ளானது என்று கூறுவது முற்றிலும் பொய் என்று யாஷிகா ஆனந்த் அந்த பதிவில் வெளியிட்டுள்ளார். 

இம்மாதிரியான பொய்யான தகவல்களை பரப்பி என்னுடைய பெயரை எவரும் கெடுக்க நினைக்க வேண்டாம் எனவும் யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.