நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை! வரலட்சுமி பகீர் முடிவு! காரணம் புரட்சி தளபதியா?

கடைசி வரை நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அதிரடியான முடிவை கூறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.


"எனக்கு காதல் கல்யாணம் இவை அனைத்தும் சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் நிஜ வாழ்க்கையில் எனக்கு ஒருபோதும்  நடக்காது " என்று தன்னுடைய திருமணம் பற்றிய முடிவை கூறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

நடிகர் விமல் , நடிகை வரலட்சுமி  சரத்குமார் ,ரோபோ ஷங்கர் பாண்டியராஜன் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் தான் "கண்ணிராசி". 

இந்த திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார் . இவர்களுடன் ரோபோ சங்கர் , யோகி பாபு மற்றும் பாண்டியராஜன் போன்ற முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர் . இது திரைப்படத்தினை அறிமுக இயக்குனரான எஸ். முத்துக்குமரன் இயக்கியுள்ளார்.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். 

மேலும் இந்த திரைப்படத்திற்கான இசையை விஷால் சந்திரசேகர் அமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் நடிகர் விமல் , நடிகை வரலட்சுமி சரத்குமார் , ரோபோ ஷங்கர் இயக்குனர் , தயாரிப்பாளர் என படக்குழுவினர் சார்பில் அனைவரும் பங்கேற்றனர். 

 இயக்குனர் பேசுகையில் இந்த படம் தன்னுடைய முதல் திரைப்படமாகும் இந்த படத்தை எனக்கு வழங்கியதற்காக தயாரிப்பாளருக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன் என்று கூறினார்.

இந்த படத்தில் நடித்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிகர் விமல் ஆகியோர் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் அவர் பேசும்போது கூறினார். 

இதனை அடுத்து பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் காதல் திருமணத்தை மையமாக வைத்து  உருவாக்கப்பட்டிருக்கிறது . இந்த திரைப்படம். மேலும் இந்த திரைப்படத்தில் நான் நடிகர் விமல், ரோபோ சங்கர் , யோகி பாபு , பாண்டியராஜன் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறேன். மிகவும் ஜாலியாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. குடும்பத்துடன் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்க செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் பேசுகையில் திருமணம் என்பது என் வாழ்வில் சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் அது என் நிஜ வாழ்க்கையில் என்றுமே நடைபெறாது எனவும் வரலட்சுமி  சரத்குமார் கூறினார்.