வனிதாவிடம் இருந்து என் புருசனை மீட்டுத் தாங்க! எனக்கு 2 குழந்தைகள் இருக்கு! கதறும் பீட்டர் பாலின் உண்மையான மனைவி!

தன்னை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக எலிசபெத் ஹெலன் என்பவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.


நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் வனிதாவின் அதிகாரப்பூர்வமான 3வது கணவர் ஆவார். நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில் எலிசபெத் ஹெலன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பீட்டர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

தனக்கும் பீட்டருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளதாகவும் 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் எலிசபெத் கூறியுள்ளார். இந்த நிலையில் பீட்டர் திடீரென நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டிருப்பதாக எலிசபெத் கூறியுள்ளார். தன் கணவரை வனிதாவிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்ற கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென அவரது மனைவி என்று கூறிக் கொண்டு பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.