தெய்வமகள் வாணி போஜன் காட்டில் மழை! முதல் படமே ரிலீஸ் ஆகல! 3வது படத்திற்கு தேடி வந்த தயாரிப்பாளர்!

நடிகை வாணி போஜன் தனது மூன்றாவது படத்தில் நடிகர் அருண் பாண்டியன் தயாரிப்பில் நடிக்க உள்ளார் .


தெய்வமகள் சீரியலில் நடித்து புகழ்பெற்ற வாணி போஜன் , சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் . நடிகை வாணி போஜன் தமிழில் தனது அறிமுக படத்தில் நடிகர் வைபவ்  உடன்  ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் . இந்த திரைப்படத்தை SG சார்லஸ் இயக்குகிறார் .

மேலும் நடிகை வாணி போஜன் தனது இரண்டாவது படத்தில் தெலுங்கு சினிமாவில் நடிகர் விஜய் தேவர் கொண்டா தயாரிப்பில் நடித்து வருகிறார் .இந்த இரு படங்களும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் , நடிகை வாணி போஜன் தனது மூன்றாவது திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார் . 

புதுமுக இயக்குனர் நிரோஜன் இயக்கும் திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் . 90ML திரைப்படத்தில் நடித்த  பொம்மு லட்சுமியும்  இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த திரைப்படத்தை நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் A&P தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன . 

நடிகை வாணி போஜன் நடித்த இரண்டு படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் மூன்றாவது படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .