பிரபல பாக்., கிரிக்கெட் வீரருடன் நடிகை தமன்னாவுக்கு திருமணம்..?

பிரபல நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்து கொள்ளப்போவதாக இணையத்தில் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.


தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை தமன்னா ஆவார். கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிய இவர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற பல்வேறு நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னாவின் திருமணம் பற்றிய செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக இணையத்தில் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டது போலவே நடிகை தமன்னாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறார் எனவும் இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. 

ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் உள்ள அப்துல் ரசாக் பற்றி இதுபோன்ற தகவல் வெளியானதால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் கோபத்துடன் இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகை தமன்னாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் ஒன்றாக தங்களது கைகளில் நகைகளை வைத்திருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற வதந்தி இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

ஆனால் ஆராய்ந்து பார்த்ததில் அந்த புகைப்படம் நீண்ட நாட்களுக்கு முன்பு துபாயில் ஒரு நகைக்கடையின் திறப்பு விழாவில் எடுக்கப்பட்டதாகவும், அந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை தமன்னா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் நடிகை தமன்னா இதைப் பற்றி எதுவும் கவலை படாமல் லாக் டவுன் நேரத்தில் தனது வீட்டில் சமையல் மற்றும் உடற்பயிற்சி செய்து ஜாலியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.