30 வயதில் கவர்ச்சியில் புது எல்லை! வைரலாகும் தமன்னா புகைப்படம்!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர்.


இவர் கேடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதற்குப்பின் சுறா, படிக்காதவன், பையா, கண்டேன் காதலை என பல திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரை உலக ரசிகர்களை தன் வசம் இழுத்தவர் என்றே கூறலாம். தமிழ் ,தெலுங்கு , இந்தி என மொத்தம் 60 படங்களிலும் 50 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

தற்போது நடிகை தமன்னா சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை ஆர் .ரவீந்திரன் தயாரிக்க உள்ளார். மேலும் திரைப்படத்திற்கான இசையை ஹிப்ஹாப் தமிழா அமைக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாக வைரலாக பரவ காரணமாகத் திகழ்வது போஸ்டரில் அவர் அணிந்திருந்த உடை தான். அதாவது நடிகை தமன்னா அந்த போஸ்டரில் பச்சை நிறத்தில் மிகவும் குட்டையான ஆடையை அணிந்திருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் பலரும் 30 வயதில் இந்த கவர்ச்சி தேவையா எனவும் கிண்டலடித்து உள்ளனர். மேலும் சிலர் இது என்ன கவர்ச்சியில் புதிய எல்லையை அடைந்துள்ளார் நடிகை தமன்னா எனவும் கமென்ட் செய்துள்ளனர்.