அஜித்துடன் ஆசை..! விஜயுடன் லவ் டுடே..! நடிகை சுவலட்சுமி இப்போ என்ன ஆனாங்க தெரியுமா?

ஆசை திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் நடிகை சுவலட்சுமி.


கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான ஆசை திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சுவலட்சுமி. இந்த திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் சுவலட்சுமி கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்.

இதற்குப் பின்பு தளபதி விஜயுடன் லவ்டுடே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் உச்சத்தை அடைந்தார் நடிகை சுவலட்சுமி. குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இவர் சிறிது காலம் கழித்து சீரியல்களிலும் நடிக்க துவங்கினார் . அதிலும் இவர் சன் டிவியில் நடித்த சூலம் சீரியல் மிகப்பெரிய வெற்றியை கண்டது என்றே கூறலாம். 


இதற்கு பின் நடிகை சுவலட்சுமி கடந்த 2002 ஆம் ஆண்டு , சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வந்த ஸ்வாகாடோ பன்னீர்ஜீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவை விட்டு முழுவதுமாக ஒதுங்கி இருக்கும் இவரை , சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக இயக்குனர் மோகன் ராஜா தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அப்போதிருந்த ஒரு சில சூழ்நிலைகள் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறி விட்டாராம் நடிகை சுவலட்சுமி. இவர் தற்போது திரை உலகை விட்டு விலகி இருந்தாலும் இவர் நடித்த திரைப்படங்கள் இன்னும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன என்று தான் கூற வேண்டும். மேலும் நடிகை சுவலட்சுமி தன் கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.