தனக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட பிக்பாஸ் நடிகை!

தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சுஜா வருணி.


இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஆவார். குணச்சித்திர வேடங்களிலும், கவர்ச்சியாக நாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான சிவகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கர்ப்பமாக இருப்பதை ஒட்டி வளைகாப்பு நடைபெற்றது . இதில் அவரது குடும்ப உறுப்பினர்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர். தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது . குழந்தைக்கு அத்வைத் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த விழாவிற்கு இவர்களின் உறவினர்களும் திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு குழந்தையை வாழ்த்தினர். மேலும் இந்த மகிழ்ச்சியான சம்பவத்தை சுஜாவருணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்தியாக பதிவிட்டுள்ளார். மேலும் முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.