ஸ்ரீதேவியை தேடிச் சென்றவர் விஜய்! அஜித்தை தேடி வந்தவர் ஸ்ரீதேவி! எப்படி தெரியுமா?

நடிகர்கள் அஜித், விஜய் இருவருமே தீவிர ஸ்ரீதேவி ரசிகர்கள். இதனை இருவருமே பல முறை பேட்டியில் கூறியுள்ளனர்.


இதனிடையே இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் ஒரு காட்சியில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் கூற ஸ்ரீதேவி அஜித்தை தேடி வந்து பேசி கவுரவ வேடத்தில் அந்த படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டு, அஜித்தும் நடித்தார். இதனால் நடிகர் அஜித்துக்கும், நடிகை ஸ்ரீதேவிக்கும் இடையேயான நட்பு அதிகமாகியது . 

 ஆனால் விஜய் தனது புலி படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க படாதபாடு பட்டார். அந்த வேடத்திற்கு ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று விஜய் அடம்பிடித்தார். ஆனால் ஸ்ரீதேவி சம்பளம் அதிகமாக கேட்டார். இதனால் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு வழியாக விஜயுடன் நடிக்க ஒப்புக் கொண்டார் ஸ்ரீதேவி. ஆனால் புலி படத் தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக ஸ்ரீதேவி புகார் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

 தமிழில் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்ற நீண்ட கால ஸ்ரீதேவியின் ஆசையை , ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் , தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை  தயாரித்தார். இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .