ரோஹித் சர்மாவுடன் தகாத உறவு! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறி, பிரபல நடிகை சோஃபியா ஹயத் புத்தகம் எழுதி வெளியிட உள்ளார்.


பிரிட்டனைச் சேர்ந்தவர் சோஃபியா ஹயத். மாடலிங் மற்றும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக, பிரபலமான இவர் கடந்த 2012ம் ஆண்டில் ரோஹித் சர்மாவுடன் நெருங்கி பழகியதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி பல தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரோஹித் சர்மா வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 

   எனினும், இதுபற்றி அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.  அதேசமயம், ஆதாரம் ஏதுமின்றி, சோஃபியா ஹயத் வீண் புகார் சொல்வதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சோஃபியா தனது வாழ்க்கையை மையமாக வைத்து சுயசரிதை ஒன்றை எழுதியுள்ளார். 

விரைவில் இந்த புத்தகம் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ள சோஃபியா, இதில் ரோஹித் சர்மாவுடன் தனக்கு இருந்த நெருங்கிய தொடர்பு பற்றி விவரித்துள்ளாராம். 

கடந்த 2012ம் ஆண்டு ரோஹித் சர்மாவுடன் சோஃபியா டேட்டிங் சென்றாராம். லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் இருவரும் முதல்முறையாக சந்தித்ததாகவும், அப்போது, ரோஹித் சர்மா பாய்ந்து வந்து, தனக்கு முத்தம் கொடுத்ததாகவும் சோஃபியா ஹயத் குறிப்பிடுகிறார். 

ஊடகங்களுக்கு தங்களது உறவு பற்றி தெரியாதவரை, எல்லாம் நல்லவிதமாகச் சென்றது என்றும், அதன்பிறகே அவரை விட்டு பிரிய நேரிட்டது என்றும் சோஃபியா தெரிவிக்கிறார். 

குறிப்பாக, சோஃபியாவுடன் என்ன உறவு என்று ஊடகங்கள் கேள்வி கேட்டபோது, அவர் வெறும் ரசிகை மட்டுமே என்று ரோஹித் சர்மா கூறினாராம். இந்த விசயம் மனதளவில் பெரும் காயம் ஏற்படுத்தியதால், மனமுடைந்து, அவரை விட்டு பிரிய நேரிட்டதாக, சோஃபியா ஹயத் குறிப்பிட்டுள்ளார். 

இந்த புத்தகம் வெளிவந்தால், இந்திய கிரிக்கெட் உலகில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.