சினேகா கர்ப்பமா இருந்தாலும் தனுஷ்க்காக அந்த காட்சியில் நடிச்சாங்க..! பட்டாஸ் டைரக்டர் வெளியிட்ட ஷாக் தகவல்!

நடிகை சினேகா கர்ப்பமாக இருந்த போதிலும் பட்டாசு திரைப்படத்தில் தனுஷுக்காக பல சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துக் கொடுப்பதாக அந்த திரைப்படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் கூறியிருக்கிறார்.


நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் பட்டாசு. இந்த திரைப்படத்தில் புன்னகை அரசி சினேகா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரைப்படம் முழுவதுமே தனுஷ் உடனே பயணம் செய்யும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிகர் தனுஷ் துள்ளலான இளம் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இயக்குனர் துரை செந்தில்குமார் இதற்கு முன்பு முதல் இரண்டு திரைப்படங்களை தனுஷின் தயாரிப்பில் இயக்கினார் . தற்போது அடுத்த இரண்டு திரைப்படங்களையும் தனுஷை வைத்து இயக்கியிருக்கிறார் ஆகவே துரை செந்தில்குமாரின் திரைப்பயணத்தில் தொடர்ந்து தனுஷிடம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டாசு திரைப்படத்தில் தான் சந்தித்த சவாலான விஷயங்களை பற்றி அவரிடம் கேட்டபோது பல சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அடிமுறை என்ற தற்காப்பு கலையை மையமாக வைத்து இந்த பட்டாசு திரைப்படம் நகர்கிறது. கலரிக்கும் முன்னாலிருந்த தற்காப்புக்கலை என்று அத்திரைப்படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் நடிகை சினேகாவை பற்றிய பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதாவது திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது நடிகை சினேகா கர்ப்பமாக இருந்திருக்கிறார். இதனால் அவரை எப்படி வைத்து வேலை வாங்குவது என்று இயக்குனர் துரை செந்தில்குமார் அவதிப் பட்டிருக்கிறார். இருப்பினும் நடிகை சினேகா தன்னுடைய வாந்தி , மயக்கம் அனைத்தையும் ஒரு புறம் தள்ளி வைத்து படத்திற்காக தன்னுடைய முழு எனர்ஜியும் செலுத்தி அழகாக நடித்துக் கொடுத்திருக்கிறார். 

திரைப்படத்தை பார்க்கும் பொழுது அவருடையஈடுபாடு உம்மால் அறிந்துகொள்ள முடியும் என்று இயக்குனர் துரை செந்தில்குமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நடிகை சினேகா கர்ப்பமாக இருந்த போதிலும் அடிமுறை என்ற தற்காப்பு கலை பயன்படுத்திவரும் சண்டைக்காட்சிகளில் மிக தைரியமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆகவே இந்த திரைப்படம் அவரது கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுப்பேட்டை திரைப்படத்திற்குப் பின்பு நீண்டகாலத்தை அடுத்து தற்போது தனுஷுடன் சினேகா கூட்டணி பட்டையை கிளப்பி வருகிறது.