பிரபல தமிழ் நடிகையான சந்தோஷிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அவரது கணவர் மகிழ்ச்சியாக தகவல் வெளியிட்டுள்ளார்.
திருமணமாகி 9 வருடங்கள்! இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்து நெகிழும் நடிகை!
நடிகை சந்தோஷிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அவரது கணவர் மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். சந்தோஷி அவரது இரட்டைக் குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
சந்தோஷி முதன்முதலாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வந்த பாபா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதற்குப் பின் பாலா , ஆசை ஆசையாய் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சந்தோஷி.
மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் அரசி, மரகதவீணை, இளவரசி போன்ற செயல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்போது அவருடன் வேலை பார்த்த ஸ்ரீகர் என்பவருடன் காதல் வசப்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்ரீகர் சந்தோஷி திருமணம் நடைபெற்றபோது நடைபெற்றபோது ஸ்ரீகருக்கு ஏழு வயது கொண்ட ஒரு ஆண்பிள்ளை இருந்தது. தற்போது சந்தோஷி ஸ்ரீகர் தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.