மூச்சை அடக்கி தண்ணீருக்கு அடியில் சென்று போஸ் கொடுத்த நிறைமாத கர்ப்பிணி நடிகை! யார்? ஏன் தெரியுமா?

சென்னை: கர்ப்பமாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியக்கச் செய்துள்ளார் நடிகை சமீரா ரெட்டி.


கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலமாக, தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தைப் பிடித்தவர் சமீரா ரெட்டி. இதுதவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும்  ஹிந்தி மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டிக்கு, நிறைய ரசிகர்கள் உள்ளனர்.  

இவர் கடந்த 2014ம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அத்துடன், தனது  சினிமா நடிப்பு தொழிலில் இருந்து முற்றிலுமாக விலகிவிட்டார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் இருந்த நிலையில், திடீரென தற்போது ஒரு சர்ப்ரைஸ் போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீரா ரெட்டி வெளியிட்டுள்ளார்.


அதனைப் பார்த்து ரசிகர்கள் பலர் வியப்படைந்துள்ளனர். அந்த புகைப்படங்களில் என்ன விசேஷம் என்கிறீர்களா, நீருக்கு அடியில் இருக்கும் சமீரா ரெட்டி, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். காதல் தேவதையாக பார்த்த சமீரா தற்போது தாய்மைக் கோலத்தில்  இருப்பதைக் கண்டு வியந்த ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படங்களை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.