சுஷாந்த் சிங் சடலத்துக்கு அருகே வைத்து பிரபல நடிகையிடம் விசாரணை..! ஹாஸ்பிடலுக்கு ரகசியமாக வந்து சென்ற பின்னணி!

உயிரிழந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் சடலம் வைக்கப்பட்டிருந்த ஹாஸ்பிடலுக்கு ரகசியமாக வந்த நடிகை ரியாவை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் நெஞ்சங்களில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மும்பையில் இருக்கும் கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்த அவரது உடலை பார்ப்பதற்காக அவரது காதலி என கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்கரபோர்த்தி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வந்திருந்தார். 

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வந்து நடிகர் சுஷாந்த்தின் உடலை பார்ப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் அவரை கேள்வி எழுப்பியுள்ளனர். நடிகை ரகசியமாக வந்து இறந்த நடிகரின் உடலைப் பார்த்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகை ரியா அந்த புகைப்படத்தில், வெள்ளை நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு முகத்தை மூடிய படி நடந்து செல்கிறார். இந்த காட்சிகள் அந்த புகைப்படங்களில் பதிவாகி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடிகை ரியாவை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து வாக்குமூலத்தையும் பெற்ற பதிவு செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிந்த பின்பு நடிகர் சுஷாந்த் இன் உடல் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவர்களது வழக்கப்படி நல்ல முறையில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரைத்துறை சார்ந்த பிரபலங்களும் மற்றும் அவரது நண்பர்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.