இடுப்பு மடிப்பு போட்டோவுக்கு பிறகு எல்லாம் மாறிடிச்சி..! பெரிய பெரிய புராஜெக்ட்லாம் வருது! சிலிர்க்கும் ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் சில நாட்களுக்கு முன்னர் புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.


ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆண் தேவதை திரைப்படத்திற்கு பிறகு நடிகை ரம்யா பாண்டியனுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

நடிகை ரம்யா பாண்டியன் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மொட்டைமாடியில் புடவையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டார் . 

நடிகை ரம்யா பாண்டியன் புடவை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த ஒரே போட்டோஷூட் மூலம் தமிழ் திரையுலகின் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார் நடிகை ரம்யா பாண்டியன்.

இதுதொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரம்யா பாண்டியன் , இந்த ஃபோட்டோ சூட்டிற்கு ரசிகர்களிடமிருந்து இவ்வளவு ரெஸ்பான்ஸ் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடமிருந்து எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது . மேலும் இந்த போட்டோ சூட்டிற்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன .

இப்போதைக்கு எல்லா வாய்ப்புகளும் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே உள்ளதால் ,இப்போதைக்கு அதிகாரபூர்வமாக சொல்ல இயலாது. வாய்ப்புகள் உறுதி ஆகி விட்டால் நானே எந்தெந்த படங்களில் நடிக்கிறேன் என்று உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றும் நடிகை ரம்யா பாண்டியன் கூறியுள்ளார் .