கல்லூரி பேராசிரியை வேடம்! அரை நிர்வாண காட்சி! டபுள் ஓகே சொன்ன வெயில் பிரியங்கா!

நடிகை பிரியங்கா நாயர் தன்னுடைய புதிய தமிழ் திரைப்படத்தில் அரை நிர்வாணத்தில் நடிக்கப்போவதாக கதகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ் திரையுலகில் வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நாயர் . இவர் வெயில் திரைப்படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "உருகுதே" பாடலின் மூலமாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர். 

நடிகை பிரியங்கா நாயர் வெயில் திரைப்படத்தை அடுத்து தொலைபேசி , திருத்தம் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருப்பார் . தமிழ் அல்லாது மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இவர் சமீப காலமாகவே தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு மற்ற மொழிகளில் நடித்து வந்திருந்தார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி தர காத்திருக்கிறார். 

அறிமுக இயக்குனரான ராஜ கஜினி இயக்கப்போகும் "உத்தரன்" திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை பிரியங்கா நாயர். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா நாயர் கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காவல் நிலைய காட்சியில் , நடிகை பார்வதி நாயர் அரை நிர்வாணத்தில் நடிக்கயிருப்பதாக திரைப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் நடிகையின் இந்த தைரியம் மிக்க நடிப்பை பாராட்டியும் பேசியிருந்தார்.