படுக்கைக்கு செல்லும் போது ஆணுறை அவசியம்! பிரபல நடிகையின் ஓபன் டால்க்!

ஆர்டிஎக்ஸ் லவ் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் படத்தின் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பாயல் ராஜ்புத் நடித்து இருக்கிறார் . இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி முற்றிலும் மாறுபட்ட கருத்தை சமுதாயத்திற்கு தெரிவிக்கவும் விதமாக அமைந்திருந்தது. 

நடிகை பாயல் ராஜ்புத சமீபகாலமாகவே பாதுகாப்பான உடலுறவு , கருக்கலைப்பு போன்றவை பற்றிய விழிப்புணர்வை அளிக்கும் விதமாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை பாயல் ராஜ்புத் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பங்கேற்றார் .

அப்போது பேசிய அவர் , ஆணுறைகளை எவ்வாறு பயன்படுத்துவது , எதற்காக பயன்படுத்துவது மற்றும் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேச வேண்டிய சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .ஆனால் அது பற்றி பேசவும் இங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் . இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆணுறையை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தான் நடித்த ஆர்டிஎக்ஸ் லவ் திரைப்படத்தினை பற்றி கூறினார் . அதனுடைய டீஸர் சமீபத்தில் வெளியானது  அதில் முத்தம் , நெருக்கமான காட்சிகள் என பல இருந்தாலும் அது முற்றிலும் மாறுபட்ட கோணத்தை முன்வைக்கக் கூடியதாக இந்த திரைப்படம் அமைந்திருக்கும் என்று கூறினார்.

மேலும் பல சுவாரசியமான கருத்துக்களை உள்ளடக்கியதாகும் இந்த திரைப்படம் இருக்குமென கூறியிருக்கிறார்.