வாயில் சிகரெட்..! குபு குபு புகை..! நம்ம நஸ்ரியாவா இது? வெளியான புகைப்படத்தால் அதிர்ந்த ரசிகர்கள்!

நடிகை நஸ்ரியா மற்றும் அவரது கணவர் பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான நடிகை நஸ்ரியா, தமிழ் சினிமாவில் நேரம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து இவர் அட்லியின் இயக்கத்தில் நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார்.

தமிழ் , மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை நஸ்ரியா ஆவார். மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் நடிகை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பின்பு நடிகை நஸ்ரியா திரை உலகை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிரித்திவிராஜின் தங்கையாக கூட எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய கணவருடன் இணைந்து டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ரஷித் எடுக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகை நஸ்ரியா வாயில் புகை தள்ளியும் கையில் சிகரெட் பிடித்துக் கொண்டும் காட்சி அளிக்கிறார. இதனைப் பார்த்த நஸ்ரியாவின் ரசிகர்கள், நஸ்ரியாவா இது? என்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.