53வயது நதியாவின் யாரும் பார்த்திடாத 2 மகள்கள்..! தாயையும் அழகில் மிஞ்சினர்..! புகைப்படம் உள்ளே!

அழகில் தாயையும் மிஞ்சிய 53 வயதாகும் நடிகை நதியாவின் மகள்களின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


நடிகை நதியா கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்கு முன்பாக அவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படத்திற்குப் பின்பு அடுத்தடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இதனை அடுத்து வெற்றி நாயகியாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டார். தமிழைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் நதியா மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். தற்போது வரை அவர் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, சத்யராஜ், பிரபு ஆகியோருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். கவர்ச்சியை மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்த பல நடிகைகளின் முன் கவர்ச்சி இல்லாமல் வெறும் தன்னுடைய நடிப்பை மட்டுமே நம்பி களம் இறங்கியவர் நடிகை நதியா. அடுத்தடுத்து இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற ஆரம்பித்தது.

இதனைத்தொடர்ந்து மார்க்கெட்டில் நதியா புடவை, நதியா கம்மல் என பல பொருட்களும் அவரது பெயரில் விற்க தொடங்கியது. இதற்கு பின்னர் அவர் திருமணம் வாழ்க்கையில் ஈடுபட துவங்கினார். ஆகையால் 1994 பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு தாயாக நடித்திருப்பார் நடிகை நதியா. அவரது நடிப்பை நீண்ட நாட்களாக பார்த்திராத ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது என்றே கூறலாம்.

தமிழைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் பல திரைப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் நதியா. இவரைப் பார்த்த எல்லோருமே அந்த வயதில் எப்படி இருந்தாரோ அதே மாதிரி தற்போதும் இருக்கிறாரே!! இது எப்படி? என ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மற்றும் சிலர் 53 வயதிலும் எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நதியாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் நதியா, அவரது கணவர் மற்றும் அவரது இரண்டு மகள்கள் சனம் மற்றும் ஜனா ஆகியோர் இணைந்து இருக்கின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களின் மகளை பார்த்து, நதியாவின் மகள்கள் தாயின் அழகையே மிஞ்சி விட்டார்கள் என்று கருத்து கூறி வருகின்றனர்.