முதல் கணவனுக்கு அந்த கொடுப்பணை இல்லை..! 2வது கணவனால் கர்ப்பமான மைனா நந்தினி..! அவரே வெளியிட்ட ஸ்வீட் நியுஸ்..!

சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினி, கர்பமாக இருப்பதை உறுதிசெய்து ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.


பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததால் மைனா நந்தினி என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சீரியல் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெள்ளைக்கார துரை, வம்சம், வெண்ணிலா கபடி குழு, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிலும் பிரபலமானார்.

நடிகை மைனா நந்தினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சில காலம் சீரியலையும் படங்களையும் விட்டு விலகியிருந்த நடிகை மைனா நந்தினி சமீபத்தில் சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நடிகை மைனா நந்தினி சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கணவருடனும் குடும்பத்தினருடனும் கோலாகலமாக வீட்டிலேயே கொண்டாடியிருக்கிறார்.

அந்தக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களில் நந்தினி சற்று உடல் எடை கூடி கர்ப்பமாக இருப்பது போன்று காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா ? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மைனா நந்தினி, ஆம்.. நான் கர்ப்பமாக தான் இருக்கிறேன்.. என்று மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து. இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.