42 வயது! நடிகை மீனா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்! என்ன ஒரு அழகு?

தென் இந்திய திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை மீனா.


முதல் திரைப்படம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படமாகும். 1990களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்துள்ளார்.

இவர் கதாநாயகியாக நடித்து வெளியான முத்து திரைப்படம், ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து ஜப்பான் நாட்டு ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார் . என் ராசாவின் மனசிலே, எஜமான், அவ்வை சண்முகி, வீரா, முத்து, சிட்டிசன், ரிதம், வில்லன், பொற்காலம், அன்புள்ள ரஜினிகாந்த், சேதுபதி ஐபிஎஸ், பாரதி கண்ணாம்மா, தாய் மாமன், கூலி, செங்கோட்டை, ஆனந்த பூங்காற்றே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை மீனா. 

நடிகை மீனா திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார் ஆனால் தற்போது ஒருசில மலையாள திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் தற்போது 42 வயதாகும் நடிகை மீனா புதியதாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதில் மிகவும் மாடலாக உடை அணிந்து பிரம்மாண்டமாக போஸ் அளித்துள்ளார் நடிகை மீனா. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை மீனாவை புகழ்ந்து வருகின்றனர்.