கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தா கவர்ச்சி காட்டக் கூடாதா? நடிகை மீனா எடுத்த துணிச்சல் முடிவு!

முதன்முதலாக வெப் சீரிஸ் களைத் தயாரிக்க உள்ளது லைக்கா நிறுவனம்.


ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 , சூர்யா நடிக்கும்  காப்பான், மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் உள்பட பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வரும்  லைக்கா  நிறுவனம் தற்போது  வெப் சீரிஸ் துறையில் காலடி பதிக்க  உள்ளது.b

90களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை மீனா இவர்  சிறிது காலமாகவே சினிமா துறையை விட்டு விலகியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள வெப் சீரிஸ்  முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை மீனா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரிஸ் , நடிகர்  அருண்விஜய் வைத்து ஒரு புதிய திரைப்படத்தை   இயக்கும் இயக்குனர் பாக்சா இயக்கவுள்ளார். மேலும் இது ஜி5 வில் ஒளிபரப்பாகும் என லைகா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

இப்பொழுது இருக்கும் வேகமான காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் வெப் சீரிஸ் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதன் காரணமாகவே தயாரிப்பு நிறுவனங்களின் கண்கள் வெப் சீரிஸ்  பக்கம் நகர தொடங்கியுள்ளன.

நீண்ட நாட்களுக்குப் பின் நடிகை மீனாவின் நடிப்பில் உருவாக இருக்கும் இடத்தைச் அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை . அதே சமயம் வெப் சீரிஸ் என்றாலே வில்லங்கமான காட்சிகளும், கவர்ச்சிகளுக்கும் குறைவிருக்காது. 

அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் மீனா இதில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது கல்யாணம் ஆகிவிட்டால் கவர்ச்சி காட்டக்கூடாதா என்கிற ரீதியில் இருக்கிறது என்று கோடம்பாக்கம் குருவி பேசிக் கொள்கிறது. சரி 42 வயதில் கவர்ச்சி காட்ட என்ன இருக்கிறது? என்றும் சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.