வயிற்றில் குழந்தை! நிறைமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு மைனா நந்தினி செய்த செயல்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை மைனா நந்தினி தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.


பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததால் மைனா நந்தினி என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சீரியல் மட்டும் அல்லாமல் சில திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெள்ளைக்கார துரை, வம்சம், வெண்ணிலா கபடி குழு, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிலும் பிரபலமானார்.

நடிகை மைனா நந்தினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சில காலம் சீரியலையும் படங்களையும் விட்டு விலகியிருந்த நடிகை மைனா நந்தினி சமீபத்தில் சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நடிகை மைனா நந்தினி சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கணவருடனும் குடும்பத்தினருடனும் கோலாகலமாக வீட்டிலேயே கொண்டாடியிருக்கிறார்.

அந்தக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து மூலமாக அவர் கர்ப்பமாக இருப்பதை வெளியுலகிற்கு தெரியவந்தது இதனை தொடர்ந்து நடிகை மைனா நந்தினி தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து நடிகை மைனா நந்தினியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறிய வண்ணம் இருந்தனர். இதனையடுத்து மைனா நந்தினி தற்போது மீண்டும் ஒரு புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பார்ப்பதற்கு சோகமாக கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கிறார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நீங்கள் இப்படி சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளலாமா? எனவே சந்தோஷமாக இருங்கள் என்று கூறி வருகின்றனர்.