சினிமாவில் மார்க்கெட் அவுட்! புது பிசினசில் லட்சுமி மேனன் பிஸி!

நடிகை லட்சுமிமேனன் கேரளாவை சேர்ந்தவர் . இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார


தமிழில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பின் இவரது நடிப்பில் வெளிவந்த கும்கி , நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இத்தகைய சிறப்புமிக்க நடிகை சில காலமாக திரைத்துறையை விட்டு விலகியிருக்கிறார் . இவருக்கு சரியான படம் அமையாததால் இவர் திரைத்துறையை விட்டு விலகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில் , என் மனதிற்கு பிடித்தார் போல்  கதை  தற்போது அமையவில்லை. ஆகையால் சிறிது காலம் திரைப்படத் துறையிலிருந்து ஓய்வெடுக்கலாம் என்று நினைத்துள்ளேன். 

எனக்கு நடனம் என்றால் எப்போதும் பிடிக்கும் . நான் சிறுவயதில் இருந்தே நடனம் பயின்று வருகிறேன். ஆகையால் வீட்டில் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்கிறேன்.

நடன பயிற்சி ஆசிரியராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்னுடைய மாணவர்களின் அரங்கேற்றத்தை எப்போது பார்ப்போம் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார் நடிகை லட்சுமிமேனன்.