நீ அவளுக்கு தான் பிறந்தியா? நடிகை குஷ்பு வெளியிட்ட வீடியோ..! அதற்கு ரசிகர் கேட்ட கேள்வி! ட்வீட் அதிர்ச்சி!

தன்னை இழிவாக பேசி கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு நடிகை குஷ்பூ தகுந்த பதிலடி அளித்துள்ள ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஒன்றாக இணைந்து நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு ஆவார். நடிகை குஷ்புவின் நடிப்பில் கிறங்கிப் போன ரசிகர்கள் ஒரு சிலர் இணைந்து கோவிலும் கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பூ, ரஜினி, கமல், சரத்குமார், போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் இவர் இயக்குனர் சுந்தர்.சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். வயதானாலும் நடிகை குஷ்பூ, சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான லட்சுமிஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இந்நிலையில் நடிகை குஷ்பு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது பேசிய அவர் மக்கள் யாரும் சமூக இடைவெளியை பொருட்டாகவே மதிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட மதுபான கடைகளுக்கு முன்பாக கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று இருந்ததை நம்மால் காண முடிந்தது.

பிரச்சினையானது மக்களிடமும் உள்ளது என்று கூறியது மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகளும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். இந்த வீடியோபதிவினை நடிகை குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் . இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் தவறான வார்த்தைகளில் நடிகை குஷ்புவை திட்டி கமெண்ட் செய்திருந்தார். அந்த நெட்டிசன் அளித்த கமெண்ட்டிற்கு, உன் ஆத்தா பேரு நல்லா இருக்கு. நீ அவளுக்கு தான் பிறந்தியா? என்று நடிகை குஷ்பு அந்த நெட்டிசனுக்கு தகுந்த பதிலடி அளித்திருக்கிறார். தற்போது நடிகை குஷ்புவின் இந்த பதிவானது சமூகவலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.