வயது 39 ஆகிவிட்டது! இன்னும் ஏன் கல்யாணம் செய்யவில்லை? மூத்த நடிகை சொன்ன செம்ம காரணம்!

பிரபல நடிகை கௌசல்யா இதுவரை ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தை தெரிவித்துள்ளார் .


15 வருடங்களுக்கு முன்னால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை கவுசல்யா. இவர் வானத்தைப்போல , காலமெல்லாம் காதல் வாழ்க போன்ற வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஆவார் . 

அதன் பிறகு சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை கௌசல்யா சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் . 

இந்நிலையில் 39 வயதாகும் நடிகை கவுசல்யா தன்னுடைய சினிமா பயணத்தையும் இதுவரை ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தையும் கூறியுள்ளார் .

திருமணம் செய்துகொண்டு மனைவி குழந்தை கணவன் என்ற குறுகிய வட்டத்துக்குள் என்னால் இயங்க இயலாது எனவும் , மேலும் எனக்கு சிங்கிளாக இருக்கத்தான் மிகவும் பிடிக்கும் எனவும் நடிகை கௌசல்யா கூறியுள்ளார் .