எங்க அக்கா ரெண்டு பேரை காதலிச்சாங்க..! பிரபல நடிகையின் தங்கை வெளியிட்ட சீக்ரெட்!

நடிகை கிர்தி சனோன் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார்.


நடிகை கிர்திக்கு , நுப்பூர் என ஒரு தங்கையும் உண்டு. தற்போது நுப்பூர் ஹிந்தி சினிமாவில் புதிய திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் இணைந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வினை பற்றியும் பகிர்ந்து கொண்டனர். 

நுப்பூர் பேசும் போது தன்னுடைய சகோதரியான கிர்தி , இதுவரை இருவருடன் காதல் செய்துள்ளார் எனவும் கூறினார். கீர்த்தி இதுவரை இரண்டரை ஆண்டுகள் வரை ஒருவருடன் டேட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைப்பற்றி கிர்தி பேசுகையில், "எனக்கு உறவுமுறைகளில் நம்பகத்தன்மை தான் முக்கியமானது, ஒருவருடைய நம்பகத்தன்மை எங்கு உடைகிறதோ அப்போது என்னுடைய உறவும் அங்கே முடிந்துவிடும் " எனவும் கூறினார். என்னுடைய காதல் முறிவிற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும் எனவும் கூறினார். மேலும் சில சமயங்களில் அது நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுக்கும் முடிவாக கூட இருக்கக்கூடும் என்று கூறினார் நடிகை கிர்தி. 

பின்னர் பேசிய நுப்பூர் அவர்களுக்கு இடையேயான உறவைப் பற்றி கூறியிருந்தார். ஒருநாள் நான் மிகவும் கோபமடைந்து என்னுடைய ரூமில் தனியாக இருந்து வந்தேன் . எனக்கு அப்போது அமைதி தேவைப்பட்டது. ஆகையால் நான் எவருடனும் பேசாமல் இருந்தேன். அப்போது என்னுடைய சகோதரி கிர்தி என் அறைக்குள் வந்து என் தலை மேல் ஏறி நிற்க ஆரம்பித்து விட்டாள் என்று கூறினார்கள் நுப்பூர்.

நடிகை கிர்தி பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவர் , அவருடைய பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க அவர் இந்தப் படிப்பை முடிந்ததாகவும் கூறினார். மேலும் அவர் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.