பார்த்துங்க..! மெதுவா..! பதமா..! ஒரே நேரத்தில் ஸ்டாலின் - எடப்பாடிக்கு குறி வைக்கும் கஸ்தூரி!

அறிக்கை விட்டு கொரோனாவை அழிக்க முடியுமா எனவும் கொரோனாவிலும் கூட விளம்பரம் தேடுவதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த ஒரு சில வாரங்களாகவே கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு காரசார விவாதங்களையும் தங்களது கருத்துக்களையும் அறிக்கையின் மூலமாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது இது தொடர்பாக டுவிட்டரில் ட்வீட் செய்திருந்தார். 

அந்த ட்வீட்டில் அறிக்கை விட்டு அடக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் - 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி,0 விளம்பரம். அதிகம் பேசவில்லை .அனைத்தும் செயலில் காட்டுகிறார்கள். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு எனவும் அந்த ட்வீட்டில் அவர் கூறியுள்ளார்.

மேலும் அரசியல்வாதிகள் கொரோனாவில் கூட விளம்பரம் தேடுவதை தவிர்க்கவேண்டும். இது ஆட்சியில் இருப்பவர்கள் , எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் பொருந்தும். மக்களுக்கு சுயகட்டுப்பாட்டை எடுத்து சொல்ல வேண்டும், கற்பிக்கவேண்டும், அதற்கு துணை நிற்க வேண்டும் எனவும் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டையும் குறிப்பிட்டு கொரோனாவில் விளம்பரம் தேடுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.நடிகை கஸ்தூரியின் இந்த ட்விட் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

இவரது ட்வீட்டைப் பார்த்த நெட்டிசன்கள் நடிகை கஸ்தூரியிடம் நீங்கள் சொல்வது தமிழக தலைவர்களா? இல்லை தமிழக ஆளுங்கட்சி தலைவர்களா? பார்த்து மேடம் மெதுவா பதமா அறிக்கை விடுங்க என கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.