எப்பவும் லாக் போடுறது..! மூடுறது..! இதே தானா? சந்திக்கு வந்த கஸ்தூரி பஞ்சாயத்து!

நடிகை கஸ்தூரி நெட்டிசன் ஒருவரை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டபடி திட்டி கமெண்ட் செய்திருக்கும் செய்தியானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை கஸ்தூரி தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி போட்டியாளராக பங்கேற்றார். இதன்மூலம் ரசிகர்களிடத்தில் மீண்டும் பிரபலமான ஒருவராக மாறினார். இதனையடுத்து கஸ்தூரி தெலுங்கு சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை கஸ்தூரி எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நம்முடைய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகளும் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய வீட்டில் முடங்கி இருக்கிறார். 

மே 3ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், அதை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் அதிகம் உள்ளதாக நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். கஸ்தூரி வெளியிட்ட இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர், நீ கூட கண்ட்ரோல் இல்லாம பேசிக்கிட்டே இருக்க.. கொஞ்சம் வாயை லாக் பண்ணிவை என்று கூறியிருந்தார். உடனே அதனைப் பார்த்த நடிகை கஸ்தூரி, 'உன் அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா இன்னிக்கு உன்னோட இம்சை இருந்திருக்காது' என பதிலளித்திருந்தார். தற்போது நடிகையின் இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.