வயதுக்கு வந்த போது எப்படி இருந்தேன்..! கஸ்தூரி வெளியிட்ட டீன் ஏஜ் புகைப்படம் உள்ளே..!

பிக்பாஸ் புகழ் கஸ்தூரி தன்னுடைய டீன் ஏஜ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய கடந்த கால நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


நடிகை கஸ்தூரி தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் மிஸ் மெட்ராஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி போட்டியாளராக பங்கேற்றார். இதன்மூலம் ரசிகர்களிடத்தில் மீண்டும் பிரபலமான ஒருவராக மாறினார். இதனையடுத்து கஸ்தூரி தெலுங்கு சின்னத்திரையில் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஆகவும் இருந்து வருகிறார் நடிகை கஸ்தூரி. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் எல்லோரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் துரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய டீனேஜ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய அழகிய ஞாபகங்களை நினைவுகூர்ந்து இருக்கிறார்.


கஸ்தூரி வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் இரட்டை ஜடை அணிந்துகொண்டு மிகவும் அழகாக காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் தங்களுடைய எண்ணங்களை கமெண்ட்களாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.