சுந்தர் சி நாயகி தலைக்கு மொட்டை அடித்து புகைப்படத்தை வெளியிட்ட கணவர்..! ஏன் தெரியுமா?

மொட்டை தலையுடன் காட்சியளிக்கும் நடிகை ஜோதிர்மயின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


நடிகை ஜோதிர்மயி , தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் நான் அவன் இல்லை , அறை எண் 305ல் கடவுள், தலைநகரம், பெரியார், வெடிகுண்டு முருகேசன், சபரி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். மலையாள திரையுலகை பொறுத்தவரை 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிர்மயி ஆவார்.

நடிகை ஜோதிர்மயி முதலில் நிஷாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடன் திருமணம் முடிந்த கையோடு சினிமாவை விட்டு விலகியிருந்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குனர் அமல் நீரத் என்பவரை காதலித்து வந்தார். 

இதனையடுத்து அமல் நீரத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நடிகை ஜோதிர்மயி. தற்போது இவர் தன்னுடைய கணவன் உடன் இணைந்து அழகிய குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் நடிகைகள் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகள் அனைவரும் தங்களுடைய சமூக வலைதளங்களின் மூலமாக புதிய பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் நடிகை ஜோதிர்மயின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் அவரது கணவரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதாவது நடிகை ஜோதிர்மயி அவர்களின் இரண்டாவது கணவர் அமல் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஜோதிர்மயி மொட்டையடித்து மிகவும் சோகமாக காட்சி அளிக்கிறார். மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, தமஸோமா ஜோதிர்கமய... என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை பதிவிட்டிருக்கிறார். இறைவா இருளில் இருந்து எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு செல் என்று இந்த ஸ்லோகம் தமிழில் பொருள்படும். 

இருப்பினும் நடிகையின் இந்த மொட்டை தலைக்கு என்ன காரணம் என அவர் குறிப்பிடவில்லை. தற்போது நடிகை ஜோதிர்மயின் மொட்டை தலை உடன் கூடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.