ஒரு நாள் முழுக்க உதட்டு முத்த காட்சி! சளைக்காமல் நடித்துக் கொடுத்த இளம் நடிகை!

மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா.


குடும்ப குத்து விளக்காக கருதப்படும் நடிகை இந்துஜா ஒரு நாள் முழுக்க முத்தக்காட்சியில் நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை இந்துஜா தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இப்போது இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் முத்த காட்சி இடம்பெறும் திரைப்படம் பிகில் அல்ல . "சூப்பர் டூப்பர் " என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார் நடிகை இந்துஜா. சூப்பர் டூப்பர் திரைப்படத்தில் நடிகர் த்ருவா உடன் ஜோடியாக நடித்திருக்கிறார் . லிப் டூ லிப் முத்தம் அளித்ததும் நடிகர் த்ருவாவிற்கு தான்.

அதாவது இந்த சூப்பர் டூப்பர் திரைப்படத்தில் ஒரு முத்தக் காட்சி இருக்கிறது. இந்த காட்சியை சரியாக படமாக்க பட வில்லை என்பதால் மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது . ஆகையால் நீண்ட நேரமாக எடுக்கப்பட்டன முத்தக்காட்சி பற்றி பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது. பல மணி நேரம் எடுக்கப்பட்ட இந்த முத்தக்காட்சி எத்தனை வினாடிகள் படத்தில் இடம்பெற போகிறது என்பது கேள்விக்குறிதான்.

மேலும் இந்த திரைப்படத்தின் திருப்புமுனையாக இந்த முத்தக்காட்சி அமையும் என்று திரைப்படக்குழுவினர் கூறியுள்ளனர். முதலில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தை மட்டுமே எடுத்து நடித்த நடிகை இந்துஜா தற்போது எல்லாவித கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார். இதை பார்க்கும்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்காமல் ஓய மாட்டார் என்று நன்கு தெரிகிறது.