காதல் உணர்வுடன் காம உணர்வும் இருக்கனும்..! விஜய் பட நடிகையின் செம ஹாட் அட்வைஸ்!

நடிகை இலியானா காம உணர்வை பற்றி கூறிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகை இலியானா சமீபத்தில் லவ் லாப் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருந்தார். அந்த விழாவில் பங்கேற்ற நடிகை இலியானா, சிவானி தண்டேகர் என்பவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். இலியானா பேசிய அந்த கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நடிகை இலியானா நீண்ட நாட்களாக ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இவர்களது காதல் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து இலியானா அந்த சுகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அதனை கருத்தில் கொண்டுதான் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருந்தார். அப்போது இலியானா ஷிவானி என்பவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது தன்னைப் பற்றின சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

அதாவது பாலிவுட் சினிமாவில் தனக்குள்ள நெருங்கிய நண்பர்கள் பற்றியும் மேலும் சினிமா துறைக்குள் தான் எப்படி நுழைந்தார் என்பதைப் பற்றியும் கூறிக்கொண்டிருந்தார் அதாவது தனக்கு பாடுவது ரொம்ப பிடிக்கும் என்றும் , ஆனால் எதிர்பாராதவிதமாக நடிக்க வந்ததாகும் இலியானா கூறினார். இதனை அடுத்து பேசிய இலியானா, காதல் உணர்வுடன் காம உணர்வும் இருக்கனும் என்று கூறினார். நாம் காதலில் இருந்தால் காமமும் மிகவும் அழகாக தெரியும் எனவும் கூறினார் நடிகை இலியானா. 

மேலும் பேசிய நடிகை இலியானா காதல் முறிவினால் தனக்கேற்பட்ட மன உளைச்சலை பற்றியும் பகிர்ந்து கொண்டார். இந்த மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக தன் மனதை பலகோணங்களில் செயல்படுத்தி வருவதாக கூறினார். நடிகை இலியானா தற்போது பகல்பதி எனும் திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.